Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சிஅரசு மருத்துவமனையில் ‘எபோலா’ சிகிச்சை

காங்கோ, உகாண்டா, தென்சூடான் ஆகிய நாடு களில் பரவும் எபோலா நோய் உலகம் முழுவதும் அதிர்ச்சி அளித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவின்படி அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற் கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்று போக்கு, காரணமில்லாத ரத்த போக்கு, தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் சந்தேகப்படும்படி
யாக இருந்தால், உடனடியாக அரசு மருத்துவ மனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனி மைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுபோன்ற அறிகுறிகளுடன் யாரும் வெளி நாடுகளில் இருந்து வருகின்றனரா என கண்டறிந்து பாதிப்பு இருந்தால், உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே கரோனா பரவல் சமயத்தில் தனி மைப்படுத்தல் வார்டாக செய்லப்பட்ட மருத்துவ மனைக்கு பின்புறம் உள்ள தனி கட்டடத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் 10 படுக்கைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதற்கென மருத்துவர்கள் மற் றும் செவிலியர்கள் குழு தயார்நிலையில் உள்ளனர். 24 மணி நேர கண்கா ணிப்பு வார்டாக செயல் படும் வகையில் உள்கட் டமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

error: Content is protected !!