Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

திருச்சி டவுன் ரெயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டவாளத்தை கடக்க முடிந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறந்தவர் பற்றி உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் வாக்களித்ததற்கான அடையாள மை அவரது விரலில் காணப்பட்டது. இறந்த நபர் வெள்ளை நிற ஊதா கட்டம் போட்ட முழுக்கை ரெடிமேட் சட்டை, நீல நிற ரெடிமேட் பேண்ட், கருப்பு நிறத்தில் காலணி அணிந்துள்ளார். இறந்தவர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இறந்த நபரின் உடலை கைப்பற்றி திருச்சி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டாலின் திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி விசாரணை செய்து வருகிறார்.

error: Content is protected !!