டெல்லியில் 75 வயது மூதாட்டியிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக் கூறி மர்ம கும்பல் ரூ.2.48 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. போலீஸ், சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய கும்பல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரது மொபைல் எண் சிக்கியுள்ளதாக மிரட்டியது. 22 நாட்களுக்கும் மேலாக வீடியோ கால் மூலம் கண்காணித்த அவர்கள், வீட்டை விற்க வைத்து ரூ.2.40 கோடியை பறித்ததுடன், தங்க நகைகளை அடகு வைக்கச் செய்து பணத்தையும் பெற்றுள்ளனர்.
‘டிஜிட்டல் கைது’ பெயரில் மூதாட்டியிடம் ரூ.2.48 கோடி மோசடி
