Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

8 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…”தோழி மூதாட்டி” கைது

கோவை, பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (77).விசாலாட்சி தனது கணவர் மற்றும் ஒரு மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.அன்பு நகர் பகுதியில் வசித்து வந்த விசாலாட்சியை அவரது மற்றொரு மகனான நமச்சிவாயம் அடிக்கடி வீட்டிற்கு சென்று கவனித்து வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனது தாயை பார்க்க சென்ற போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விசாலாட்சியை கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரியப்படுத்தினர்.மேலும் மூதாட்டி விசாலாட்சி அணிந்திருந்த சுமார் எட்டு பவுன் தங்க நகைகள் மாயமானதும் தெரியவந்தது.இதனை அடுத்து நமச்சிவாயம் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் மூதாட்டியின் இறப்பு குறித்து விசாரணை செய்து வந்தனர்.சந்தேகம் மரணத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதனை அடுத்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.நகைக்காக கொலை செய்வோர் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்தும், அவர்களை விசாரித்தும் வந்தனர். மேலும் சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.இருப்பினும் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாகவே அமைந்து வந்தது.இந்நிலையில் அதே பகுதியில் மூதாட்டி விசாலாட்சி வீட்டின் அருகில் வசித்து வந்த, அவரது தோழியான 75 வயது சரோஜா மீது போலீசாருக்கு சந்தேக வந்ததை அடுத்து போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,மறைந்த உதவி காவல் ஆய்வாளரின் மனைவியான சரோஜா மற்றும் விசாலாட்சி ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தோழிகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மூதாட்டி சரோஜா விசாலாட்சி அணிந்திருந்த நகைக்காக அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.இதனை அடுத்து விசாரணை முடிவில்,கொலை செய்ததாக மூதாட்டி தெரிவித்ததை அடுத்து, மூதாட்டியை அழைத்து வந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தள்ளாடும் வயதில் மூதாட்டி தனது தோழியையே நகைக்காக கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!