தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்குப் புதிய காவல் கண்காணிப்பாளர்களை (SP) நியமித்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக ஜி. ஜவஹர் ஐ.பி.எஸ் அவர்களும், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-யாக டாக்டர் கே. பிரபாகர் ஐ.பி.எஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இ. சுந்தரவதனம் ஐ.பி.எஸ் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு ஜி.எஸ்.ஏ. மயில்வாகனன் ஐ.பி.எஸ் ஆகியோரைப் புதிய காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தாமதமின்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், புதிய அதிகாரிகள் பணியில் சேர்ந்ததற்கான அறிக்கையை நாளை (மார்ச் 28) காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள் தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பொறுப்பிலும் நியமிக்கப்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

