எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியதாவது..
முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை.
இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள்”
“தேர்தலின் போது அறிவித்த பல அறிவிப்புகளின் ட்ரெய்லராக, ப்ளூ ப்ரிண்ட்டாக இந்த கூட்டம் இருக்கும் என நினைத்தோம். மக்களும் அதைதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது
.கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எப்படி Escape ஆகலாம் என்பதை காட்டும் முன்னோட்டமாக சமீபத்தில் வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கை வெளியிடப்பட்டது”
த.வெ.க அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசித்துள்ளார்.
த.வெ.க-வினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக ஆளுநர் உரை உள்ளது.
முதலமைச்சர், த.வெ.க-வினர் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக ஆளுநர் உரை.
திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை.
எங்கள் அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர்; மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே ஆளுநர் உரை அமைந்துள்ளது.
தவெக – பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது – உதயநிதி ஸ்டாலின் என்று இவ்வாறு தெரிவித்தார்.
