தமிழகத்தில் 7,405 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தேர்தல்களை நான்கு நிலைகளில் நடத்திடத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வாரியாகச் சங்கங்களைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு நிலையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய விவரங்களை மின்னஞ்சல் மற்றும் நேரடி நகல் மூலம் உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்துப் பதிவாளர்களுக்கும் ஆணையர் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
