கோவை, பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செட் தீப்பிடித்ததால் எலக்ட்ரிக் பைக் கார் மற்றும் இரண்டு ஆடுகள் பலி கோமங்கலம் போலீசார் விசாரணை பொள்ளாச்சி-மார்ச்-21 பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்தி கண்ணன் என்பவர் தோட்டத்தில் வசித்து வருகிறார் இவர் தோட்டத்தில் தகர கொட்டகையில் தான் வளர்த்து வந்த இரண்டு ஆடுகள் கட்டி வைத்திருந்தார் மேலும் அவருக்கு சொந்தமான ஷிப்ட் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக் ஓலோ வெளிப் புறத்தில் நிறுத்தி வைத்துள்ளார் நேற்று நள்ளிரவு கொட்டகை பகுதியில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து ஆடுகள் மற்றும் வாகனங்கள் எரிந்து சாம்பல் ஆனது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த சம்பவம் குறித்து கோமங்கல காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாங்கள் ஆசை வளர்த்து வந்த ஆடுகள் பலியானதால் சக்தி கண்ணன் குடும்பத்தார் சோகத்தில் உள்ளனர்

