Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

கரூர்-கோவை சாலைக்கு 135 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை திட்டம், 1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு: திமுகவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறி அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ வாக்கு சேகரிப்பு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோ, மீண்டும் இரண்டாவது முறையாக 2026-ல் களமிறங்கி தீவிர

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகிறார்.

இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காருடையாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஒத்தை கடை, அண்ணா நகர், பாரி நகர், இந்திரா நகர் மற்றும் புன்னம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிபுரம், ஆண்டிப்பட்டி, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வேட்பாளர் இளங்கோவை வரவேற்றனர். அப்பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பேசிய திமுக வேட்பாளர் இளங்கோ,
“கரூர் – கோவை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். அந்த கோரிக்கையை

நிறைவேற்றி 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நான்கு வழிச்சாலையாக மாற்றியுள்ளோம்.

அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் 1,870 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள்,” எனக் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!