Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர்
லட்சுமணன் (75) ,இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் குமாரசாமி  பொறியியல் கல்லூரி விடுதியில் சமையல்  உதவியாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை எஜ்ஜம்மாள் தான் தங்கி இருந்த அறைக்கு பின்புறம் நடந்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தளவாபாளையம் மாரியம்மன் கோவில் நிலத்தில் சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலியை பிடித்ததார்.

அப்போது கம்பி வேலிக்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியில் நேற்று மழை பெய்த போது தென்னை மட்டை விழுந்து அதன் வழியே கம்பி வேலியில் மின் கசிவு ஏற்பட்டுகொண்டிருந்தது. அதன் காரணமாக மின்சாரம் தாக்கி எஜ்ஜம்மாள் கீழே விழுந்து இறந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம்  போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி  விசாரணை நடத்தி னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!