Skip to content

இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதில் திமுக சார்பில்  சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.  இது தவிர சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  மொத்தம் 55 பேர் மனு தாக்கல் செய்த நிலையில்  மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால்  47பேர்  களத்தில் உள்ளனர்.  இறுதி வேட்பாளர் பட்டியல் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதன் பிறகு சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.

error: Content is protected !!