Skip to content

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்.

இன்று மதியம் திமுக வேட்பாள் சந்திரகுமார் , தேர்தல் அதிகாரியான  மாநகராட்சி ஆணையர் மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  அவருடன்  மறைந்த  ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன்  சஞ்சய் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.  நாளை மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.  20ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

 

error: Content is protected !!