Skip to content

உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய  கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள  திரிவேணி சங்கமத்தில்  நீராடி வருகிறார்கள்.

தை அமாவாசையையொட்டி  மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை வழக்கத்தை விட அதிகமான மக்கள்  புனித நீராட திரண்டனர்.  திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதால்,  திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.  ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30  பெண்கள்  காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த  நெருக்கடி  காரணமாக   ஏராளமானோர்  தங்கள் உடமைகளை தவறவிட்டனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள்   நகருக்கு வெளியே  நிறுத்தப்பட்டனர்.  புனித நீராட தடை விதிக்கப்பட்டது.  பரபரப்பு அடங்கிய பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து  பிரதமர் மோடி  உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம்  போனில் கேட்டறிந்தார். நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

error: Content is protected !!