Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது…. அமெரிக்கா

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த போரால், வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர்.

போரை நீட்டித்து சென்று, உக்ரைனை தோற்கடிக்க ரஷியா விரும்புகிறது. கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை கொண்டு விரைவாக ரஷிய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என அமெரிக்க உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்த நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷியாவை எதிர்க்க போர் விமானங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!