Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்

தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!