இன்ஜினியரிங் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (23). பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள் இருந்துள்ளன. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அவரது மனநிலை பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி கனிஷ்கா யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். பின்னர் பெற்றோர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு கடந்த 10 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி சமயபுரம் டோல்கேட் மாருதி நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46) கூலித் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு, தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உறவினர்கள் அவரை மருத்துவமனைகளில் சேர்த்து உயிரை காப்பாற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து மாயமானார்.
பின்னர் வீடு திரும்பவில்லை.
பின்னர் தாளக்குடியில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் உறவினர்கள் அவரை மீட்டு இருங்கலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவுக்கு அடிமையான இளம் பெண் தற்கொலை
சமயபுரம் அருகே உள்ள மகிழம்பாடி இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரது மனைவி மீனாட்சி (வயது 26 )இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மீனாட்சிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மீனாட்சி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மகிழம்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மீனாட்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரி லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
