நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகம் தனக்கடவு பகுதியில், வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகளின் முன்னிலையில், மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். யானை இறப்பிற்கான காரணம் தெரியாததால், அதன் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
