Skip to content

பட்டாசு கடையில் தீ- 12 பேர் பலி… சீனாவில் பரிதாபம்

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வாணவேடிக்கையின்போது பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

சீனாவில் பட்டாசு கடையில் தீப்பற்றி எட்டு பேர் பலியான சோகம் மறைவதற்குள், மற்றொரு பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்து உள்ளனர். நம் அண்டை நாடான சீனாவில், சந்திர புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சீன ஜோதிடத்தின்படி இது ‘குதிரை ஆண்டு’ தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாகும்.

இந்நிலையில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஜியாங்யாங் நகரில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தால் 12 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!