Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகையன் விவசாயி இவரது மனைவி செல்வி மகள் அபிநயா ஆகியோர் உள்ளனர். முருகையன் வீட்டின் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டைகையில் தீ பிடித்து எரிய
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க போராடினர். இருப்பினும், எரிந்த கீற்றுக்கொட்டைகையில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்

வெடித்து சிதறியது. இதில் முருகையன் மனைவி செல்வி மகள் அபிநயா,15,. தீயை அணைக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ்வரன், செல்வராஜ், காளியம்மாள், உள்ளிட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மீதம் உள்ள ஏழு பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்

விபத்து குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு அவரது உறவினர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர் பாதுகாப்பிற்கு போலீசாரம் குவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!