Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடுமையாக போராடிய தீயணைப்பு ஊழியர்கள் பல மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள் ரியோ டி ஜெனிரோவின் ஒலிம்பிக் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 வாகனங்கள் அடங்கிய ஒரு பெரிய அவசரகால மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

சில மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும், தீ பரவல் பெரும்பாலும் ஒலிம்பிக் பூங்காவில் துணியால் ஆன கூரைப்பகுதியோடு மட்டுமே நின்றுவிட்டதாகவும் ரியோ டி ஜெனிரோ நகர தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் ஏதும் இல்லை; மேலும், ஒலிம்பிக் அருங்காட்சியகத்தையும் உள்ளடக்கிய கட்டிடத்தின் உட்பகுதி இந்த தீ விபத்தில் ஏதும் சேதம் ஆகாமல் பாதுகாப்பாகவே உள்ளது. தற்போதைய தீ விபத்து சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் இந்த பூங்காவில் கூரையால் தீ விபத்துகள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற தீ விபத்துகள் இரண்டு முறை நிகழ்ந்தன. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, கீழே விழுந்த காகித வான விளக்குகளே (paper sky lantern) தீ விபத்துகளுக்குக் காரணமாக அமைந்தது.

இதனிடையே இந்த தீ விபத்து வளாகத்தின் பிற பகுதிகளுக்கு பரவுவதற்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த பெரும் தீ விபத்து தொடர்பாக அந்நாட்டு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட ஒலிம்பிக் பூங்கா தற்போது நேஷ்னல் சைக்கிளிங் மற்றும் பளுதூக்குதல் அணிகளுக்கான பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பிரேசில் முதன்முறையாக கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. அப்போது அந்நாடு 7 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றது. அக்காலகட்டத்தில், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான ஒலிம்பிக் போட்டியாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!