Skip to content

ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் மங்கல்கிரி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின் பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியுள்ளது.

இதில், பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பயணிகளை எச்சரித்து, உடனே கீழே இறங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!