Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாவுக்குத் தற்காலிகத் தடை!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு” ; சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்: வனத்துறையினர் அதிரடி அறிவிப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் அருவியில் கொட்டும் வெள்ளம்: மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்ல தடை!

​கோவை, மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, பிரசித்தி பெற்ற கோவை குற்றால அருவியில் (Kovai Kutralam Falls) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர் மழை பெய்து வருவதால், மலைப் பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் கோவை குற்றால அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் இந்த தடை விதித்து நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

அருவிப் பகுதிக்குச் செல்லக் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு, சூழல் சுற்றுலா மையமும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. நிலைமை சீராகி, நீர்வரத்து குறையும் வரை மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டு இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
​எனவே, வார இறுதி நாட்களில் கோவை குற்றாலத்திற்குச் செல்லத் திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்டச் சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவிப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும், வனத்துறையின் இந்த எச்சரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!