Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

உலக பட்டினி தினத்தில் கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நாடுகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரிசெய்ய வலியுறுத்தி, உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தளபதி விஜய் மக்கள் இயக்கம், பல ஆண்டுகளாகப் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் விலையில்லா விருந்தகங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, இன்று வரை செயல்பட்டு வருகின்றன. கழகத் தலைவர் அவர்கள் வழிகாட்டுதலில், ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா விருந்தகங்கள் இயங்கி வருகின்றன.

புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை (28.05.2025)உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலின் பேரில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!