Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்த நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது.

இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி, ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் திரு. தீரஜ் தீக்‌ஷித், முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் திரு. வி. ராஜா விமல குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!