Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை வழங்க கோரி திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியில் சுமார் 80க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். மிகவும் பிற்பட்டோர் வகுப்பை நாங்கள் குடியிருக்க வீட்டு மனை இல்லாமல் ஒரே வீட்டிற்குள் இரண்டு, மூன்று குடும்பங்கள் கஷ்ட நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

நாங்கள் நிலமற்ற கூலி தொழிலாளிகள். கிடைக்கும் வேலையை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறோம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் குடிமனை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!