Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இனி 1 நாள் 25 மணி நேரமாகும்’’- நாசா விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்

இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர். ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றிய காலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும், அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர். அதன்பின் 24 மணிநேரமாகி, தற்போது அது 25 மணிநேரமாக மாறவிருப்பதும் குறிப்பிடதக்கது.

error: Content is protected !!