பணத்தை வைத்து சூதாடிய 8 பேர் கைது
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி அருகில் பணத்தை வைத்து சூதாடிய உறையூர் பங்காளி தெருவை சேர்ந்த பாரூக் (வயது 50) தேவதானபுரம் மூவேந்தர் நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) சீனிவாசன் (வயது 46)பாலக்கரை சேர்ந்த கார்த்திக் (வயது 32), திருவரங்கம் ராஜா (வயது 31) சிந்தாமணியை சேர்ந்த சிவா (வயது 46) ஐயப்பன் (வயது 44) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகளையும்,13 ஆயிரத்து 500 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பிறகு கைது செய்யப்பட்ட 8 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை.. 2 பேர் கைது
திருச்சி முடுக்குப்பட்டி பகுதி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 25)என்பவரை கண்டோன்மென்ட் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து கைது செய்து உள்ளார். இதே போன்று அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட
ஜெகநாதபுரத்தில்புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அரியமங்கலத்தைசேர்ந்த செல்வகுமார் (வயது 42) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் மலையப்பன் வழக்குப் பதிந்து கைது செய்து உள்ளார். மேற்கண்ட 2 பேரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிந்தாமணி முனிசிபல் காலனி சேர்ந்த வீரையன் என்ற ரவுடி (வயது 24 )என்பவர் அவரது அங்காடிக்கு சென்று ரூபாய் 4000 பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு கடையை கற்களால் அடித்து நொறுக்கி அந்த கண்ணாடி தூளை எடுத்து செந்தில் கன்னத்தில் கீறி பணம் கேட்டு மிரட்டி விட்டு அவரிடம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த செந்தில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துவீரையனை கைது செய்துள்ளனர்.
