Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்துவர தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு  திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தருமபுரம், அச்சுதராயபுரம், மூங்கில்தோட்டம், கருங்குயில்நாதன்பேட்டை, கீழிருப்பு ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த கிராம நாட்டாமைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றிலை,பாக்கு பணம் வைத்து தருமபுரம் ஆதீனம் வழங்கினார். தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயசத்துடன் திருமண விருந்து நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் நடைபெற்றது.

பட்டினப்பிரவேசம்  எனப்படும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!