Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூரில் தள்ளுவண்டி கடையில் கஞ்சா விற்பனை– 2 பேர் கைது

திருவள்ளூரில் தள்ளுவண்டி கடையில் கஞ்சா விற்பனை– 2 பேர் கைது

திருவள்ளூரில் பானிபூரி விற்பது போன்று தள்ளுவண்டி கடையில் கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கட்டுமானம், ஐஸ்கிரீம் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் வேலை செய்வதும், சிலர், பானி பூரி விற்பனை போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒருசிலர், ரயில் மற்றும் பஸ்களில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.

அவர்களை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்தும் வருகின்றனர். அதுபோன்று திருவள்ளூர் நகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி., சாய் பிரனீத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் திருவள்ளூர் நகர பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் அலுவலகம் அருகே நேதாஜி சாலையில் 2 வட மாநில இளைஞர்கள் தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்து வந்தனர். இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று பானிபூரி கடையில் இருந்த வட மாநில இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். உடனே இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் பீகார் மாநிலம், பகதூர்பூர் பகுதியை சேர்த்த அண்ணன், தம்பியான அஜித் (30), சுஷில் (எ) பாபு (27) என்பதும், பானிபூரி விற்பனை செய்து கொண்டே கஞ்சாவும் விற்று வந்தது தெரியவந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் பானி பூரி வண்டியையும் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!