ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்ஏற்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் ஹோட்டலுக்கு மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் சில ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன.பல ஓட்டல்களில் விறகு அடுப்பு வைத்துசமையல் செய்து ஓட்டலில் சாப்பாடு மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்து வருகின்றனர்.நிலையில் விறகு விலையும் திடீரென்று வியந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன.இந்நிலையில் திருச்சியில் உள்ள சில ஓட்டல்களில் தற்காலிகமாக டீ, காபி மற்றும் உணவுகளின் விலை உயர்ந்து உள்ளது.அதன்படி கிளாஸ் டீ ரூ 15, வடை ரு 10, பஜ்ஜி ரூ 8, கிளாஸ் காபி ரூ 18, இட்லி பூரி பொங்கல்,தோசை சப்பாத்தி ரோஸ்ட் விலையும் ரூ 5 உயர்ந்துள்ளது.
இந்த உயர்வு தற்காலிகமானது .எரிவாயு தட்டுப்பாடு நீங்கிய பிறகு மீண்டும் பழைய விலைக்கு டீ காபி மற்றும் உணவுகள் விற்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர்.
