Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியதில் அந்த சிறுமியை முருகானந்தம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அந்த சிறுமி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவல்லி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முருகானந்தம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் முருகானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!