Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முத்துபேயத்தேவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலிசாரின் வழிகாட்டுதலின் படி ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை விஏஓ ரம்யாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலிசார் கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!