Skip to content

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குடோனின் உரிமையாளர் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் ஆட்டோவில் பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கோவை, உக்கடம் – சுங்கம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகம் அளிக்கும் விதமாக ஆட்டோவில் வந்த நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த ஜாபர்அலி, அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற அபி, பெரியநாயக்கன் பாளையம் பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் மற்றும் கரும்புக்கடையை சேர்ந்த சமீர் என்பது தெரியவந்தது உள்ளது.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள் என்பதும் இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டு மற்றும்
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், இவர்கள் மீது பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்து உள்ளது. மேலும் விசாரணையில் இவர்கள் திருடும் பணத்தை வைத்து புனே உட்பட வெளிமாநிலங்களுக்கு சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்து மருத்துவத் துறையில் பயன்படுத்தும் என்.எஸ் வாட்டரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதையில் சுற்றி திரிந்தது தெரியவந்து உள்ளது. மேலும் போதைக்கு அடிமையான இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போதை மாத்திரைகள் வாங்குவதற்காகவே திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்து உள்ளது. அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஆட்டோவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!