தமிழகத்தில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.480குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சரிவுடன் தொடங்கியிருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

