சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தின் எதிரொலியாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.1,10,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,45,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு
