தங்கம் விலை கிட்டத்தட்ட 10 நாட்களாக விறுவிறுவென அதிகரித்து நகை வாடிக்கையாளர்களுக்கு கண்ணை கட்ட வைத்தது.
ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதி ஒரு சவரன் விலை ரூ. 1,05,760 என இருந்த நிலையில், பாதி மாதத்திற்குள் ரூ. 8,000 அதிகரித்திருக்கிறது. இந்த விலையேற்றம் இன்னும் தொடருமா? அல்லது இறங்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டால் அதற்கான தெளிவான பதில் இல்லை என்பதே நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.
கடந்த மாதம் வரை தொடர் விலைக்குறைவின் போது வரும் நாட்களில் விலை இன்னும் குறைந்து ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே செல்லும் என்று கூறிய நிபுணர்களின் கருத்தை பொய்யாக்கி இருக்கிறது அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலவரம். எனினும், இன்னும் சில மாதங்களில் அங்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் பட்சத்தில் தங்கம் விலை குறையலாம் என்று நம்பப்படுகிறது.
தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸட் 17) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது
