Skip to content
Home » நடிகர் விஜய் சொல்லியது நல்ல விஷயம் தான்…. அமைச்சர் உதயநிதி

நடிகர் விஜய் சொல்லியது நல்ல விஷயம் தான்…. அமைச்சர் உதயநிதி

  • by Senthil

நடிகர் விஜய் இன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது  மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்  அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தார். எனவே அவர் அரசியல்  பிரவேச முன்னோட்டமாக  இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம் என்ற கருத்து பரவி வருகிறது.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “நடிகர் விஜய் பேசிய நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!