Skip to content

பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

தமிழகத்தில் இந்தாண்டும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெற ரேசன் கடைக்கு, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே செல்ல முடியும். அரசு சார்பாக கொடுக்கப்படும் டோக்கன் +ஸ்மார்ட் ரேஷன் அட்டை + குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே 1000 ரூபாய் கொடுக்கப்படும். இதில் குடும்ப உறுப்பினர்கள் கை ரேகை வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த பணம் வழங்கப்படும். உங்கள் ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இணைக்கப்படவில்லை என்றால், குடும்பத்தில் யாருடைய கை ரேகை இணைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே செல்ல முடியும். அதாவது கை ரேகை பதிவு ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டவர்கள் மட்டுமே பணம் பெற முடியும். இவ்வாறு கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!