Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, தமிழ்நாட்டை அவமதிக்கும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக முதல்வரையும் தமிழ்நாட்டையும் அவமதிக்கும் வகையில் சட்டமன்றத்தை புறக்கணித்து வெளியே சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், தமிழ்நாடு என்ற பெயரை சொல்லாமல் தமிழகம் என்று குறிப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்தி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!