Skip to content

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நிவாரணத் தொகையை பெற பரிந்துரைத்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதிக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள்
இன்று மேள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசையுடன் வருகை தந்து ஆட்சியர் மகாபாரதியை கௌரவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் பொது மக்களுக்கு விவசாயிகள் இனிப்புகளை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!