Skip to content
Home » அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை……தரவரிசைப்பட்டியல் வெளியீடு

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை……தரவரிசைப்பட்டியல் வெளியீடு

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  இந்த நிலையில் , இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களும் https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் OTP எண்ணை பதிவு செய்து தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!