Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து கரூர் மாவட்டம், மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்ற தலைப்பில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்

தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், பசுமை பரப்பை அதிகப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!