Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கரீம் (28) என்ற இளைஞர் கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் தனது தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றுள்ளார்.

அப்போது காரியம் முடித்துவிட்டு பொருட்களை ஆற்றில் போடுவதற்காக காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற போது, நீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் பணியில் இறங்கினர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு நீரில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த இளைஞர் ராஜேஷ்கரீம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஏற்கனவே மாயனூர் காவிரி ஆற்றில் நான்கு பள்ளி மாணவிகள் நீரிழ் மூழ்கி உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும், ஒரு நபர் நெரூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!