ஜெயலலிதா கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் அம்மா உணவகமும் ஒன்று. அதை தி.மு.க. முறையாக பராமரிக்கவில்லை. புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகங்களுக்கு ரூ.17.60 கோடி ஒதுக்கப்பட்டதால், மே மற்றும் ஜூன் மாதங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய், உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்ட உத்தரவிட்டார். இதனையடுத்து சுமார் ரூ.17.60 கோடி மதிப்பில் 383 அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டன. இதனால் கடந்த 2 மாதங்களில் அங்கு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாள்தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
