Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… டிரைவர் பலி..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் அரைவட்ட சாலையில் சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு வாகன டிரைவர் பலியான நிலையில் மற்றொரு வாகன ஓட்டுனர்பலத்த காயமடைந்தார்

பொள்ளாச்சியில் இருந்து தஞ்சை பகுதிக்கு தேங்காய் மட்டைகள் ஏற்றுவதற்காக

பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் (45 )என்பவர் லாரியை திருச்சி துவாக்குடி அரை வட்ட சாலையில் ஓட்டி வந்துள்ளார்

அப்பொழுது காரைக்காலில் இருந்து கோவை மாவட்டம் நசியானூர் செல்வதற்காக பார்சல் சர்வீஸ் வாகனத்தை குமரேசன் (35) என்பவர் அரைவட்ட சாலையில் ஓட்டி வந்துள்ளார்

இந்த நிலையில் எலந்தபட்டி அருகே அரைவட்ட சாலையில் வந்த பொழுது இன்று காலை இரண்டு சரக்கு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது

இச்சம்பவம் பற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்து போலீசார் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு

துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு தீயணைப்பு துறையினர் லாரியில் சிக்கிய இரண்டு பேரையும் மீட்டனர் செந்தில்குமாரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இந்த நிலையில் பலத்த காயமடைந்த குமரேசனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 2 லாரிகளையும் கிரேன் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்.

error: Content is protected !!