Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை-விவசாயிகள்-மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பமான சூழ்நிலையால் பொதுமக்கள் வெளியூர் பயணங்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மதியத்திற்கு மேல் நெல்லை நகர்ப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.

நெல்லை டவுன், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, ரெட்டியார்பட்டி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனச் ஓட்டிகள் சிறிது சிரமத்திற்கு உள்ளான போதிலும், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தணிவு கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், இந்த மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்வதுடன், நடப்புச் சாகுபடி விவசாயப் பணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!