புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை. போக்குவரத்து பாதிப்பு.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் மீனம்பாக்கம் வண்டலூர் முடிச்சூர் மேடவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் திடீறென சூரை காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கன மழையால் வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலை ஜி.எஸ்.டி.சாலை ஆகிய பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதித்தது. வெய்யில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில் கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடையுந்தள்ளனர்.
