தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல்லில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மலைப்பகுதி, மதுரை, கரூர், சேலம், தருமபுரி, கருஷ்ணகிரி, குமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும். கனமழையின் போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும்.சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
