தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (ஜூலை.9) கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை
பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
