தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் கனமழை செய்தது. இந்த கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவிந்த நல்லூரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை சாகுபடி முற்றிலும் மழையில் பாதிக்கப்பட்டு விளைநிலங்களில் சார்ந்துள்ளது. இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பயிர்கள் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மழை விட்டு மழைநீர் வடிந்தால் பயிர்களை காப்பாற்றலாம் என கூறும் விவசாயிகள், தொடர்ந்து மழை பெய்தால் மகசூல் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
